2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சம்பந்தனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

Freelancer   / 2024 ஜூலை 07 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ.எச்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் காலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெற்றது. 

அரசியல் பிரமுகர்கள், பெருந்திரளான மக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு  அஞ்சலி செலுத்தினர். இறுதி கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும்  பங்கேற்றனர்.  

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்த இறங்கல் தெரிவித்து அமரர் இரா. சம்பந்தனின் உருவப்படம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு, மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக அன்னாரின் பூர்வீக இல்லத்தில் இருந்து பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் அமரர் சம்பந்தனின் பூதவுடல் அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  பிற்பகல் 4 மணிக்கு பூதவூடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி மரியாதை செலுத்துவதற்காக திருமலை சம்பந்தன் எம் பி யின் வீட்டிற்கு வந்து இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். 

அரசியல் கட்சியின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,  ரிஷாட் பதியுதீன், மற்றும் பல கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் மற்றும் பொதுமக்கள் என பலரும்  அஞ்சலி செலுத்தியதன் பின் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டு பூதவுடல் மயானத்தில் எரிக்க எடுத்துச் செல்லப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .