Freelancer / 2022 மே 25 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25) இடம் பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும், சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த கனரக வாகனமே மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025