2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செயலமர்வு...

Freelancer   / 2022 ஜூன் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு ஐக்கிய பெண்கள் அமைப்பினால் குடும்ப வன்முறை மற்றும் பரிகாரம் தொடர்பிலான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (21) கந்தளாய் சம்பத் ஹோட்டலில் நடைபெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் குடும்ப வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாகவும், இவற்றிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் காணப்படுவதாகவும் வளவாளராக கலந்து கொண்ட கந்தளாய் பொலிஸ் நிலைய முதலுதவி பிரிவுக்கான பொலிஸ் உத்தியோகத்தர் திரு. சுதர்சன தெரிவித்தார்.

மேலும், பெண்கள் குடும்பத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், பிள்ளைகளை பராமரித்து பாதுகாப்பதன் அவசியம்,  ஸ்மார்ட் தொலைபேசி பாவனையின் விபரீதங்கள், போதைப்பொருள் பாவனையின் சீர்கேடுகள், சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வளவாளர்களாகவும், கந்தாளாய் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த சமூக மட்ட பெண்கள் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .