2025 ஜூலை 23, புதன்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

George   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்க ஆபரணங்களை திருடி விட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று இரவு 8.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 4ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலும், இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம், தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .