2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள  பலசரக்குக் கடை ஒன்றை உடைத்து அதிலிருந்து பொருட்களைத்  திருடிய குற்றச்சாட்டின் பேரில் 23 மற்றும் 25 வயதுகளையுடைய 2 பேரை இன்று (26) அதிகாலை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

இக்கடையில்  புதன்கிழமை இரவு திருட்டுப் போயுள்ளதாக  அதன் உரிமையாளர் தம்மிடம் முறைப்பாடு செய்த நிலையில்,  விசாரணை மேற்கொண்டு இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .