Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் 19 கிராம அலுவலர் பிரிவுகள் இருக்கவேண்டிய நிலையில், 12 கிராம அலுவலர் பிரிவுகளே உள்ளன. ஆகவே, இப்பிரதேசத்தின் கிராம அலுவலர் பிரிவுகள் 19ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7,861 பேரும் தமிழர்கள் 6,613 பேரும் முஸ்லிம்கள் 17,541 பேரும் உள்ளனர். ஆகவே, இப்பிரதேசத்தில் கிராம அலுவலர் பிரிவுகள் 19ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தம்பலகாமம் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (31) நடைபெற்றது. இதன்போது, தம்பலகாமம் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில், தம்பலகாமம் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம்;, தம்பலகாமம் தபால் நிலையம் தனி வலயமாக மாற்றப்படுதல், தம்பலகாமம் மின்சாரசபைக்கு தனியான பிரதேச காரியாலயம், முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டை மத்திய மருந்தகம் தரம் உயர்த்தப்பட்டு, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
இக்கோரிக்கைகள் தொடர்பில் கூடிய விரைவில் கவனம் செலுத்தி தீர்வைப்; பெற்றுத்தருவதாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago