2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திலீபனின் நினைவு படத்தை அகற்றி பொலிஸார் அடாவடி

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

தியாக தீபம் திலீபனின் நினைவு படம் திருக்கோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம் பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (19) காலை நினைவுப்படம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. 

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு  வந்தது. 

இந்நிலையில்   திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ்அதிகாரிகளால் குறித்த நினைவு படத்தை முறையற்ற விதத்தில் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X