Princiya Dixci / 2022 மே 16 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 10க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே நேற்று (15) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுக்கோரளவின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான ரொஷான் அக்மீமன,
“திருகோணமலையில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான கைதுகள், அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தை வெளிக் காட்டுகின்றன” என்றார்.
இதேவேளை, திருகோணமலை நகரின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸாரால் இன்று (16) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025