Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 06 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்
நாட்டை சீரழித்தவர்களே தற்போது நாடாளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார் .
கொழும்பில் புதன்கிழமை(4) நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“நாடாளுமன்றத்தில் நடந்தது யாராலும் ஏற்றுகொள்ள முடியாததொன்று களியாட்ட விடுதிகளில் குழுக்கள் சண்டை இடுவது போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். கடந்த ஆட்சியில் நாட்டை சீரளித்தவர்களே இன்று நாடாளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பாகவே கூட்டு எதிர்கட்சியினரால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கவே அமைச்சர் சரத் பொன்சேகா முற்பட்டார். அவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை இருப்பின் அமைச்சர் சரத் பொன்சேகா பேசியதன் பின் அவர்களின் சந்தேகங்களை நாடாளுமன்றத்தில் கேட்டிருக்க முடியும்.
இவ்வாறாக சக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்க வேண்டிய தேவை கிடையாது. இதை வைத்துப்பார்க்கும்போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு வந்தவாறே தோன்றுகிறது. கிருலப்பனையில் இடம்பெற்ற மேதின நிகழ்வு தோல்வியடைந்த மன உளைச்சளிலையே இவ்வாறு செய்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கூறி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடர்ந்தால் இனி பாராளுமன்றத்துக்கு செல்லும்போது பாதுகாப்பு கவசத்துடனையே செல்லவேண்டி ஏற்படும்” என்றார்.
20 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago