Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 17 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, தோப்பூர் செல்வநகர், நீணாக்கேணிக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டதை அடுத்து, அங்கு பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கிராமத்தினுள் செவ்வாய்க்கிழமை நுழைந்த தேரர்கள் தலைமையிலான குழுவினர், 10 வீடுகளை பகுதியளவில் சேதமாக்கியுள்ளனர். இதன்போது பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
நீணாக்கேணிக் கிராமத்தில் முஸ்லிம்கள் குடியிருந்துவந்த மற்றும் பயிர்ச்செய்கை மேற்கொண்டுவந்த 40 ஏக்கர் காணியைக் கைப்பற்றுவதற்கு சேருவில பிரதேசத்திலுள்ள வில்கம் விகாரையின் விகாரதிபதியும் இளைஞர்கள் சிலரும் இணைந்து கடந்த திங்கட்கிழமை (15) முயன்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது, காணிக்கு இடப்பட்டிருந்த வேலியை அகற்றுவதற்கு முற்பட்ட வேளையில், அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago