2025 மே 16, வெள்ளிக்கிழமை

நியமனம் வழங்கப்படாத பரீட்சார்த்திகள் சார்பான வழக்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற முகாமைத்துவ உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்புப் போட்டிப்;  பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றும்  நியமனம் வழங்கப்படாத பரீட்சார்த்திகள் சார்பான வழக்கு எதிர்வரும்; 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை, திருகோணமலை மேல் நீதிமன்றில்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  இந்த வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு தள்ளிவைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம் சங்கர் அறிவித்தார்.

மேற்படி போட்டிப் பரீட்சையின்போது,  ஒரு சமூகத்தைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் சிலர் அதிகளவிலான பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றிருந்தபோதும், நியமனத்தின்போது அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்கள் சில, மேல் நீதிமன்றில்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்நிலையில் மாகாண சபையின் சார்பாக 116 புள்ளிகள் வரை எடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நியமனங்களை வழங்க இணங்கியது

ஆனாலும் மேலும் பலர் இன்னும் பாதிக்கப்ட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்து  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாகாண சபையின் சார்பான எதிர்த்தரப்பினர் கால  அவகாசம் கோரிய நிலையில்   நீதவான் இந்த வழக்கை  ஒத்திவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .