2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

Janu   / 2024 ஜூலை 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனான திருகோணமலை, மனையாவளி பகுதியை சேர்ந்த எஸ். கோகுலராஜ் (16வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் திருகோணமலையிலிருந்து தனது  குடும்பத்தாருடன் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ   குளத்துக்கு சுற்றுலா சென்ற போதே  நீரில் மூழ்கியதாக பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எப்.முபாரக் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X