2025 மே 17, சனிக்கிழமை

பாசிக்குடாவில் மூழ்கியவரை காணவில்லை

Gavitha   / 2016 டிசெம்பர் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

பாசிக்குடாவுக்கு குடும்பத்தாருடன் சுற்றுலா வந்,த கம்பளையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கெசல்வத்த வீதி, கத்துகெட கம்பளையைச் சேர்ந்த, எச்.சாந்தகேவா வயது (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாலம் போன நபரை தேடும் பணியில், கல்குடா பொலிஸாரும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .