2025 மே 19, திங்கட்கிழமை

பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக கூட்டுவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில், பட்டதாரிகளின் நியமனங்களுக்கான வயதெல்லையை 35 இலிருந்து 45 ஆக கூட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, இன்று வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில், சபை நடவடிக்கைகள் ஆரம்பித்த போது, முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் இரா. துரைரெட்ணம் ஆகியோர் மூலம்

இதுதொடர்பான அவசரப் பிரேரணை சமரப்பிக்கப்பட்டது.

இப்பிரேரணையை விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றுவதாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க இங்கு விவாதத்துக்கு இடமில்லை என, சந்திரதாச கலப்பதி சபையில் அறிவித்தார்.

இந்த வயது எல்லையைக் கூட்டுவதற்காக தான் எடுத்த நடவடிக்கையை விவரித்த முதலமைச்சர் நஸீர் அஹமட்,  அதற்கு 35 இலிருந்து 40 ஆக உயர்த்த ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்தார்.

மீளவும் அதனை 45 ஆக உயர்த்துமாறும் இந்நடைமுறையை தொடர்ந்து 5 வருடத்துக்கு கிழக்கு மாகாணத்தில் கடந்த கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இச்செயற்முறையில் வைக்குமாறும் கோரியதாகவும் அது தொடர்பான பிரேரணையை சபையில் நிறைவேற்றவும் முதலமைச்சர் கோரினார். இதனையடுத்தே பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X