Princiya Dixci / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
புல்மோட்டை, பொன்மலைகுடா அர்சிமலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு NEHRP திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் புல்மோட்டை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்படுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிக்குள் அர்சிமலை பௌத்த மத குருவால் சட்ட விரோத கட்டடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக குறித்த பிரதேச செயலாளர் மற்றும் புல்மோட்டை பொலிஸ் அதிகாரிக்கும், அரசாங்க அதிபரினால் கட்டட வேலைகளை நிறுத்தக் கோரி தொலைபேசியினூடாக பணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள், திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடந்த 02ஆம் திகதி காலை 11.00 மணியளவில் தமது பிரச்சினையை விவரித்துள்ளனர்.
இதற்கு உடனடித் தீர்வாக அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான கடற்படை கட்டளைத் தளபதிக்கு, குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக பிரதேச செயலாளரிடம் வீடகளைக் கையளித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
15 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago