2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பணத்திற்கு சூது விளையாடியவர்கள் தப்பி ஓட்டம்

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய இடமொன்றினை முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரினால் நேற்று பேராறு பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சூது விளையாடிய இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன் போது சந்தேகநபர்கள் பொலிஸாரை கண்டு 5,000 பணத்தையும் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சூது விளையாடிய இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும்,ஒரு துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெத்து வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X