2025 மே 14, புதன்கிழமை

பள்ளிவாசல் தாக்குதல்; சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

திருகோணமலை, பெரியகடை ஜும்மாப் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், சனிக்கிழமை (3) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் பள்ளிவாசல் மீது சனிக்கிழமை (3) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்;கள் இனிமேலும் இடம்பெறாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த முதலமைச்சர், 'கிழக்கு மாகாணத்தில்; இனவாதச் செயற்பாடுகள் மெல்ல, மெல்ல  இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இம்மாகாணத்தில் இடம்பெறும் இனவாதச் செயற்பாடுகளை முளையில் கிள்ளியெறிய வேண்டிய   கடமை பொலிஸாருக்கு உள்ளது.

மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும், இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  
இந்த அரசாங்கம் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .