2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பழங்குடி தினம் அனுஷ்டிப்பு

Mayu   / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீணாக்கேணி - மலைமுந்தல் கிராமத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் கரையோர பழங்குடிகளுக்கான தினம் செவ்வாய்கிழமை (06) அனுஷ்டிக்கப்பட்டது. 

அத்தோடு பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமது கோரிக்கை உள்ளிட்டவைகளை திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர்கள் இணைந்து வருகை தந்த அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர் நல்ல தம்பி வேலாயுதம், திருகோணமலை மாவட்ட பழங்குடியின தலைவர் நடராசா கணகரட்ணம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.எம்.இஸ்ஸடீன், மூதூர் உதவி பிரதேச செயலாளர் றொசானா ரஸீம் ,கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் திரு.மதன் ,மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பழங்குடியின பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X