2025 மே 14, புதன்கிழமை

பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

வடமலை ராஜ்குமார்   / 2017 ஜூன் 02 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், பொன்ஆனந்தம் 

மூதூர் பெரிய வெளியில் பாடசாலை சிறுமிகள் மூவர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமைக்குக்  கண்டனம் தெரிவித்து, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாடசாலைகளிலும் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தராததால் இன்று (02) பாடசாலைகள் இயங்காது ஸ்தம்பிதமாகின.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண தமிழர் ஆசிரியர் சங்கம் நேற்று இந்த பகிஸ்கரிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனடிப்படையில் திருகோணமலை கல்வி வலயம் மூதூர் வலயம் குச்சவெளி கோட்டம் தம்பலகாமம் கோட்டம் ஈச்சிலம்பற்று கோட்டம் உற்பட  மாவட்டத்தில் உள்ள அனைத்து வலயங்களில் உள்ள தமிழ் பாடசாலைகள் இயங்க வில்லை.

 

இதேவேளை, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலானந்தா வித்தியாலயம் , சுங்கான் குழி  கலைமகள் வித்தியாலயம், உப்பாறு றோமன் கத்தோலிக்க கலவன் வித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ் பாடசாலைகளும் இயங்கவில்லை.

அத்துடன், நகரத்தில் உள்ள தேசிய பாடசாலைகளான ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லாரி ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி புனித சூசையப்பர் கல்லூரி புனித மரியால் கல்லூரி உட்பட பல கல்லூரிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .