2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

“பொதுமக்களுடன் தொடர்பை பேணுவோருக்கு பரிசோதனை தேவை”

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அ. அச்சுதன்

பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நோக்கில் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபடுகின்றவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொண்டு அனுமதி வழங்குவதன் மூலம் மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மேலும் பாதுகாக்க முடியும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் 4ஆம் கட்டத்தை அடைந்துள்ளது. எனினும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதோடு அவர்களுக்கிடையேயான தொடர்பும் அதிகமாகப் பேணப்படுகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிகளவான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் ஊரடங்கு அமலில் காணப்படுகின்ற காலப்பகுதிகளிலும் நடமாடும் வியாபாரிகள், தன்னார்வு தொண்டர்களின் மூலமாக மக்களுக்கிடையேயான தொடர்பு அதிகமாகப் பேணப்படுகின்றது. இது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே ஊரடங்கு அமலில் உள்ள காலப்பகுதிகளில் மக்களுக்கான அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச மற்றும் தனியார் ஊழியர்கள் நடமாடும் வியாபாரிகள், தன்னார்வு தொண்டர்கள் அனைவரும் சுகாதார பரிசோதனை மேற்கொண்டு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் பொதுமக்களை கெரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் ஊரடங்கை குறைந்த பட்சம் பிரதேச செயலக மட்டத்திலாவது அமல்படுத்தி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மக்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கான அனுமதியை வழங்கும்போது அவர்கள் நோய் தொற்று அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பொலிஸார் அவர்களுக்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .