2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முதிரை மரங்களை வெட்டியவர் கைது நால்வர் தப்பியோட்டம்

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,  சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய ஒருவரை குச்சவெளி பொலிஸார் நேற்று மாலை (04) கைதுசெய்துள்ளதுடனர் தப்பியோடிய நான்கு பேரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை, சீனக்குடா  06ம் கட்டையைச் சேர்ந்த யாப்பா முதியன்சலாகே தினேஸ் தேசப்பிரிய (30 வயது) என்பவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்தே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சலப்பையாறு காட்டுப்பகுதியில், 8 முதிரை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும்  32  மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதாகவும்  குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .