2025 மே 15, வியாழக்கிழமை

மொறவெவ வைத்தியசாலைக்கு மின்வேலியை அமைக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவ வைத்தியசாலையைச் சுற்றி மின் வேலி அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், இன்றுவரை அந்த மின் வேலியை  அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த தெரிவித்தார்.

மொறவெவ பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

கடந்த வருடம்  ஜுன் மாதம் 13ஆம் திகதி, மொறவௌப் பிரதேச வைத்தியசாலை காட்டு யானையின் தாக்குதல் காரணமாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இந்த வைத்தியசாலைக்கு யானை மின் வேலியை அமைக்குமாறும் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறும்  கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர்,  யானை மின் வேலி அமைத்துத் தரப்படும் என்று  மொறவௌப் பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.

இந்த மின் வேலி அமைப்பது தொடர்பில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால், மஹதிவுல்வெவ பிரதேச சங்கமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டும் இதற்குரிய வேலை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை அவர் கூறினார்.  

இனிவரும் காலத்தில் யானைகள் அட்டகாசம் விளைவித்தால், பொதுமக்கள் தம்மை நம்ப மாட்டார்கள். எனவே, மேற்படி வைத்தியசாலைக்கு யானை வேலியை  கூடிய விரைவில் அமைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .