2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மணல் அகழ்வு; நால்வர் கைது

Editorial   / 2020 மே 31 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லை கங்கை பகுதியில், சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர், பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் இன்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நான்கு டிப்பர்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் சந்தேகநபர்கள் கந்தளாய், வான்எல, ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 25, 38, 40 வயதுகள் உடையோர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X