Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாணத்திலுள்ள மதுபானச் சாலைகளை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் இம்மாகாண சபை நியதிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பதுடன், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட மதுபானச் சாலைகள் இந்தச் சட்டத்துக்கு அமைய உள்ளனவா என்பதைப் பரிசீலிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.
மேலும், இம்மாகாணத்தில் மதுபானச் சாலைகளுக்கு புதிதாக அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த அமர்வில்; கிழக்கு மாகாணத்தில் அதிரித்து வரும் மதுபானச் சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறுத்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வா முன்வைத்தார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அளவுக்கு அதிகமாக மதுபானச் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அனுமதிகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். உரிய சட்டத்துக்கு உட்படாத மதுபானச் சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .