2025 மே 15, வியாழக்கிழமை

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Princiya Dixci   / 2017 மே 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், நபரொருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (06) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர், திருகோணமலை. இலக்கம் 96 பாடசாலை வீதியைச் சேர்ந்த கே.ராதா (62 வயது) எனத் தெரியவருகின்றது.

நிறுத்தி வைக்கப்ட்டிருந்த லொறியுடன், இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினையடுத்து, காலை 9.30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில், பிற்பகல் 1 மணியளவில், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை இவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக உப்புவெளி பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .