2025 மே 19, திங்கட்கிழமை

வீடுகளைக் கையளித்தார் சம்பந்தன்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

சம்பூர் பகுதியில் மீளக்குடியேறிய, கணவனை இழந்த 41 பேருக்கு, கனேடியத் தமிழர் பேரவை, திருகோணமலை நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து, அமைத்துள்ள தற்காலிக வீடுகளில் 23ஐ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பயனாளிகளிடம் கையளித்தார்.

இத்திட்டத்தின் இணைப்பாளர் இ.கைலைவாசனின் தலைமையில், இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற இந்நிகழ்வில், சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுளைத் தொடர்ந்து பயனாளிகளிடம் வீடுகளுக்கான சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

250,000 ரூபாய்கள் செலவில் 250 சதுர அடிகள் கொண்டதாக இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர். 

இத்திட்டத்தில் 41 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில், 18 வீடுகள் ஏற்கெனவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X