2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, வட்டவான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நகரிலிருந்து அம்பாறை நகருக்கு புறப்பட்ட தனியார் பஸ்ஸே விபத்துக்குள்ளானது.  

குறித்த பஸ் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் ஈச்சிலம்பற்று கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .