Gavitha / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நஹீம் முஹம்மட் புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று- முத்துச்சேனை கிராமத்தைச் சேர்ந்த வாய்ப்பேச முடியாத பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நிதிமன்ற பதில் நீதிபதி, நேற்று திங்கட்கிழமை (31) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற அந்த சம்பவத்தில், 40 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், வாய்ப்பேச முடியாத ஊமைப் பெண், தனது வீட்டுக்கு வந்திருந்த போது, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் சந்தேக நபரை கடந்த பல நாட்களாக பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியபரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அதன் அறிக்கையை எதிர்வரும் 08ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டள்ளார்.
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago