Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 08 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளாங்குளம் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்களுக்கு காணி ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கிராம மாதர் அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாருக்கும் கடிதம் மூலம் கிராம மாதர் அபிவிருத்திச் சங்கம் தெரியப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், விளாங்குளம் கிராமத்துக்கு பிரதேச செயலாளர் ஜே.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர், விஜயம் செய்து அங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மேற்பட்ட கிராம மாதர் சங்கத் தலைவி திருமதி எஸ்.செல்வி தெரிவிக்கையில், 'விளாங்குளத்தில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட 80க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளுக்கான ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, காணி ஆவணங்கள் இல்லாமல் இங்கு வசிக்கும் குடும்பங்கள் எந்தவித அபிவிருத்திகளிலும் ஈடுபட முடியாதுள்ளது. எனவே, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அக்குடும்பங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 1902ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த காணிகள் வன இலாகாவின் கீழ் இருப்பதாக வன இலாகா எழுத்து மூலம் தெரிவிக்கின்றது' என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர் ஜே.அருள்ராஜ், இது விடயமாக வன இலாகாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் காணி அளவு உள்ளிட்ட விவரங்களை உடன் தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த மக்களின் காணி விவரங்கள் வன இலாகாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago