2025 மே 15, வியாழக்கிழமை

வடிசாராயம் கொண்டு சென்ற இருவர் கைது

Yuganthini   / 2017 மே 12 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மூன்று போத்தல் வடிசாராயத்தை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற சந்தேகநபர் இருவரை, கந்தளாய் பொலிஸார் நேற்று(11) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இருவரும் 26,28 வயதுடைய, கந்தளாய் வான்எல பகுதியைச்சேர்ந்தவர்கள் என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் 3 போத்தல் வடிசாராயத்தினை, முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .