2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வதிவிடச்செயலமர்வு

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட அரசாங்கப் பாடசாலைகளில் சித்திரப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிடச்செயலமர்வு, இம் மாதம் 17,18,19ஆம் திகதிகளில் திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு வபா பௌண்டேஷனால் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 17 தொடக்கம் 19 வரையும் கொழும்பு விபவி லலிதா கலா எகடமியில் சித்திரப்பாட ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட செயலமர்வின் அடுத்த  கட்டமே இதுவாகும்.

சித்திரப் பாடத்தை கற்பிக்கும் போது ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறையாக முன்வைப்பதற்கு இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

றமலானுக்கு  வசதியாக காலை 8.30 தொடக்கம் பகல் 12.30 வரையும் இந்தச் செயலமர்வு வரையறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கொடுப்பனவு, உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு 0773526613 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X