2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை சேருநுவரப் பகுதியில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கின் போது, நீதிமன்றுக்கு வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த ஒருவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று செவ்வாய்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த ஜி.எம்.சந்துருவான் திஸாநாயக்க (வயது 28) என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சேருநுவரப் பகுதியில் குறித்த நபர் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மூதூர் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளையில், பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த நபரை பொலிஸார் திங்கட்கிழமை (30)கைது மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ஒரு இலட்சம் ரூபாய் சதுரப் பிணைக்கு இருவர் கையொப்பம் இடும் வரை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .