2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாரத்தில் 5 நாட்களும் அத்தியாவசிய சேவைகள்

Princiya Dixci   / 2022 மே 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்  

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அமைவாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு ஊழியர்களை சுழற்சி முறையில்  சேவைக்கு அழைத்திருப்பதாக  கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அவர், இன்று(29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “இதன்படி, திங்கட்கிழமைகளில் அனைத்து ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  அலுவலர்களை சந்தித்து தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் திங்கட்கிழமையையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஊழியர்கள் சமூகமளிப்பர்.

“அதேவேளை, பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவுகள், மோட்டார் வாகன அனுமதி பத்திரங்கள், சமூர்த்தி கொடுப்பனவு போன்ற அத்தியாவசிய சேவைகள் வாரத்தில் ஐந்து நாட்களும்  நடைபெறும்” என்றார்.

இதேவேளை, தமிழக அரசு வழங்கிய நிவாரணம் தொடர்பில் கருத்துரைக்கையில், “இந்திய அரசாங்கம் வழங்கிய நிவாரணப் பொருட்களில்  4,125 கிலோகிராம்  அரிசியும் 300 பால்மா பக்கெட்டுக்களும் கிண்ணியா பிரதேசத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

“குறைந்த வருமானங்கள் உள்ள குடும்பங்களை தெரிவுசெய்து, அவர்களுக்கு தலா 10 கிலோகிராம் அரிசியை வழங்க உத்தேசித்துள்ளோம். அத்தோடு,  போஷாக்கு குறைவான குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கும் போஷாக்கு குறைவான கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கிடைக்கப் பெற்ற பால்மா பக்கெட்டை பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .