2025 மே 19, திங்கட்கிழமை

விவசாயத்துறை சார் முன்னேற்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றினீஸ், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட விவசாயத்துறை சார் அபிவிருத்தித் திட்டமிடல் முன்னேற்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

விவசாயத்துறையோடு தொடர்புடைய திணைக்களங்கள் ஒன்றுசேர்ந்து, மாவட்ட விவசாய அபவிருத்தி  தொடர்பான முன்னோக்கிய திட்டமிடலை தயாரிக்குமாறு உரிய திணைக்கள தலைவரிடம்  மாவட்டச் செயலாளர் வேண்டிக்கொண்டதுடன், விவசாயம், உப உணவு உற்பத்தி, வீட்டத்தோட்டம் (செளபாக்யா), உரமானியம் உட்பட பல்துறைசார் விடயங்களின் சமகால நிலை தொடர்பிலும் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைபற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

செளபாக்யா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை 4,000 விதை பக்கற்றுக்களும் 5,500 மரக்கறி கன்றுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது கமநல  சேவைகள் அபிவிருத்தி  திணைக்களத்தின் உதவி ஆணையாளர் (மாவட்ட) வருணி கருணாரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X