2025 நவம்பர் 19, புதன்கிழமை

வைத்தியரின் மனைவி வெட்டிக்கொலை

Editorial   / 2024 நவம்பர் 05 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில், செவ்வாய்க்கிழமை (11) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் அவர்,கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொலையானவர் மூன்று மாதங்களின் பின் லண்டனில் இருந்து திங்கட்கிழமை (4)இரவு இலங்கை திரும்பி அன்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலை வந்திருந்த  நிலையிலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது.

சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X