Super User / 2012 ஜனவரி 06 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிருஷான் ஜீவக ஜயரூக், ஆரியதாஸ கொடித்துவக்கு)
தங்காலை பிரதேசத்தில் நத்தார் தினத்தன்று இடம்பெற்ற பிரித்தானிய பிரஜையின் கொலை தொடர்பிலான ஐந்து சந்தேகநபர்களை ஜனவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
தங்காலை பிரதேச சபை தவிசாளர் சம்பத் சந்த புஷ்பா மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சான் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்காலை நீதவான் யுரேகா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்
ஆறாவது சந்தேக நபரான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கள உத்தியோகஸ்தர் பியதாஸ் வீரகோன் சத்துரங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு தங்காலை பொலிஸார் கோரியபோதும் அவரை ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, வியாழக்கிழமை 11 மணித்தியாலங்களாக நடைபெற்ற அடையாள அணி வகுப்பின்போது, சந்தேகநபர்கள் சாட்சிகளினால் இனங்காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள தங்காலை பிரதேச சபையின் கூட்டத்தில் தவிசாளர் சம்பத் சந்த புஷ்பா கலந்துகொள்ள அனுமதிக்கும்படி அவர் சார்பில் ஆஜரான சட்டத்தணிகள் கோரினர். எனினும், ஜனவரி 20ஆம் திகதி வரை விசாரணையை நீதவான் ஒத்திவைத்தார்.
9 minute ago
15 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
21 minute ago