Super User / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிந்த, புஹுல்வெல்ல பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுக் குழியொன்று இன்று மாலை இடிந்ததால் அங்கு பணியாற்றிய 6 பேர் மண்ணில் புதையுண்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மற்றொருவர் காணாமல் போயுள்ளதால் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
30 அடி ஆழமான இக்குழியில் 7 இளைஞர்கள் மீதும் 5 அடி உயரத்திற்கு மண் இடிந்து வீழ்ந்தது.
4 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாரால் இவர்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேற்படி இரத்தினக்கல் அகழ்வுக் குழியின் உரிமையாளர் ஆவார். (கிருஷான் ஜீவக ஜயருக்)
18 minute ago
31 minute ago
34 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
34 minute ago
48 minute ago