Super User / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன பிரதேச சபை தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அல்லது மக்கள் விடுதலை முன்னணி அல்லது வேறு எந்த கட்சியாயிருந்தாலும் அதனால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரை தேவையேற்படின் சேர்த்துக் கொள்ளும் உரிமை உண்டென இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி குறித்த நேரத்திற்குள் அதிகாரமளிக்கப்பட்ட முகவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வேட்பு மனுவை தெரிவத்தாட்சி அலுவலகரிடம் ஒப்படைத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
35 minute ago
38 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago
38 minute ago
52 minute ago