2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

தர்கா நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; அறுவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கமை, தர்கா நகரில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடந்தே இந்த மோதல் ஏற்பட்டதாகவும் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து, பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் கூறியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .