2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என, அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X