2025 மே 17, சனிக்கிழமை

360 பேரின் பேஸ்புக் முடக்கப்படும் அபாயம்

Editorial   / 2019 மே 10 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தரவேற்றம் செய்த 360 பேரின் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.   

இந்த 360 பேரும் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்துள்ளனர் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில், பல்வேறான தகவல்களைப் பகிர்ந்த 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவற்றில் பெரும்பாலானவை, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையவை என்பதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களூடாகத் தவறான பிரசாரங்களைப் பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .