Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உற்சவ காலங்களில் பெரும் எண்ணிக்கையானோர், நகரங்களுக்கு வருகை தருவதால், அவர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளவென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் தொகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளாரென்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அதற்காக. கூடுதலான பொலிஸாரைக் கடமைகளில் ஈடுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையி,ல் கொழும்பில் மட்டும் 4,300 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சீருடையில், 2,800 பொலிஸாரும் சிவில் உடைகளில் 300 ஆதிகாரிகளும் போகுவரத்து கடமைகளுக்காக 1,200 அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடுகின்ற இடங்களுக்குச் செல்லும் போது, பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும், பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்தும் போது, மிகமிக கவனமாக இருக்குமாறும், தரம்வாய்ந்த பட்டாசுகளைக் கொள்வனவு செய்து பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு, சிறுவர்களுக்கு இடமளிக்கவேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பண்டிகைக் காலத்தில், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்காக, மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago