Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களுகு்கான தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில், சுகாதார அமைச்சால் 6 அம்சங்களை உள்ளடக்கிய புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றும் நபர்கள், தத்தமது வீடுகளில் 14 நாள்கள் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது
இந்த வழிகாட்டல்கள் தொடர்பில், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
1. இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னர், முதல் நாள் பி.சி.ஆர் செய்வது கட்டாயம்.
2. அரச வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், 14 நாள்கள் தனிமைப்படுத்தல் கால பகுதிக்குள் தனியறை அல்லது இரட்டைப் பகிர்வு ( நபர்களின் எண்ணிக்கை குறைந்தது 2 அல்லது ஒரே குடும்ப அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும்)
3. இந்த அறைகளுக்கு தனியான சுகாதார வசதிகள் காணப்பட வேண்டும் என்பதுடன் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுடன் தொடர்பை பேணக்கூடாது.
4. தனிமைப்படுத்தல் காலப்பகுதியில், பிற தனிமைப்படுத்தல் நபர்களுடன் கலந்துவிடக் கூடாது
5. தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்குள் 12- 14 நாள்களுக்கிடையில் பி.சி.ஆர் முன்னெடுப்பது அவசியம் என்பதுடன், இதன் பெறுபேறு எதிர்மறையாக இருக்க வேண்டும்.
6. 14 நாள்கள் நிறைவின் போது, சம்பந்தப்பட்ட மத்திய நிலையத்தின் பொறுப்பான அதிகாரி அல்லது பிரதேச சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர் குறித்து திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.
“எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 அடிப்படை அம்சங்கள் அடங்கிய வழிகாட்டல்களை முழுமைப்படுத்தும் நபர்கள், தமது வீடுகளில் மீண்டும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில்” இருப்பது அவசியம் இல்லை என சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
47 minute ago