2025 மே 15, வியாழக்கிழமை

6 முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை  பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குறித்த அறிக்கைகளை நாளை ( 23)  அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரால், கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .