2025 மே 07, புதன்கிழமை

அத்தியாவசியப் பொருள்களுக்கான இறக்குமதி தீர்வை நீக்கம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19க்கு மத்தியிலான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம், சீனி போன்றவற்றுக்கான இறக்குமதித் தீர்வைகளே, நேற்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டுள்ளதால், டின் மீன் (பெரிய) 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கலாக, 500 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு, சதொச கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்தால், ஒரு கிலோகிராம் பருப்பை, 150 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெங்கு அபிவிருத்திச் சபை, குருநாகல் பெருந்தோட்டயாக்கம், சிலாபம் பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றால், கொழும்பு நகருக்கான ​தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன.

இதனால், சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக, ​நியாயமான விலையில் ​தேங்காயைக் கொள்வனவு செய்துகொள்ள முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X