Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், இன்று (25) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டிருந்தது.
இனந்தெரியாத நபர் ஒருவர், இராணுவ சிப்பாயை தாக்கிவிட்டு, துப்பாக்கியை பறித்துச்சென்றதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த துப்பாக்கி கெக்கிராவ பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
26 minute ago