2025 மே 15, வியாழக்கிழமை

'இருந்தபோது செய்யாத மஹிந்த இப்போது கேட்கிறார்'

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத மஹிந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை எதற்காக கோருக்கின்றது? என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறான பெரும்பான்மை இல்லாத போதும், தமது அரசாங்கம் நான்கரை வருடங்களில் நாட்டின் அபிவிருத்திக்காக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு எம்பிலிபிட்டிய பொது மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் இதனைக் கூறியதுடன், ஐக்கிய தேசிய முன்னிண அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவளித்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுப்பார்கள் என்றால், நாட்டின் அபிவிருத்தியின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மகாவலி அதிகார சபையின் வலவ வலயத்தின் தேசிய சேவையாளர் சங்கத்தின் அலுவலகத்தையும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று திறந்துவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .