Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியம் மக்களுக்கு உகந்தது அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை முன்னேற்ற தேசிய பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். தேசிய பால் உற்பத்தி முன்னேற்றமடைந்தால் தான் தேசிய தொழிற்துறை மிருக வளங்கள் அபிவிருத்தியடையும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி தான் இவ்வாறு கூறுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் தம்முடன் கோபப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதை வர்த்தகர்கள், மதுபாவனையானர்கள், மருந்து விற்பனையாளர்கள் யார் தன்னுடன் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை பால்மா விடயத்தில் தன்னால் அமைதியாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான மக்களுக்கு தேசிய பாலே தேவை. நாம் பால்மா நிறவனங்களிடம் அடி பணிந்துள்ளோம். பால்மாகாரர்களால் நாட்டை தேவைக்கேற்ற மாதிரி அடிபணிய வைக்கலாம். எனினும் நாட்டு மக்களின் சுகாதாரத்தை அடிபணிய வைக்கவிடுவோமானால் அது மிகப் பெரிய தவறு எனத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் 10- 15 வரையான நாடுகளே பால்மாவை இறக்குமதி செய்கின்ற நிலையில், எமது நாடும் அதில் உள்ளடங்குகின்றமை மிகவும் துரதஷ்டமான விடயமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago