Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுமார் 16 பேர் ஹொரண வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago