2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு வந்துள்ள மலேசிய பிரதமர்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேசிய பிரதமர் இன்று இலங்கை வந்துள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பிற்கமையவே மலேசியப் பிரதமர் மொஹமட் நஜீப் அப்துல் ரசாக் உள்ளிட்ட 30 பிரதிநிதிகள்  இலங்கை வந்துள்ளனர்.

 இவர் நாட்டில் தங்கியிருக்கும் குறித்த காலப்பகுதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.

இருநாட்டு இராஜதந்திர உறவுகளின் 60 வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் மலேசியப் பிரதமரின் வருகை அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமரின் வருகைக் காரணமாக கொழும்பின் சில வீதிகள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன்,நாளையும் சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை(18) காலை 8.15 மணியிலிருந்து 10 மணி வரை காலி வீதிச் சுற்றுவட்டம் மற்றும் பழைய நாடாளுமன்ற சுற்று வட்ட வீதி என்பன 15 நிமிடங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .